இலவச வைபை பயன்படுத்தும் போது அவசியம் செய்ய வேண்டியவை

0
560

ஸ்மார்ட்போனில் எந்நேரமும் மொபைல் டேட்டா பயன்படுத்த முடியாது. மேலும் சில இடங்களில் இலவச வைபை கிடைக்கும் போது ஏன் மொபைல் டேட்டா பயன்படுத்த வேண்டும்.

ஷாப்பிங் மால், உணவகம் என எங்கு சென்றாலும் இலவச வைபை நம்மை வரவேற்கும் போது சில நிமிட பேஸ்புக், அல்லது வாட்ஸ்ப் செக் செய்ய நம்மில் பலரும் பொதுவாக கிடைக்கும் ஒ.சி. வைபை இணைப்பில் இணைந்து சில மணி துளிகள் செலவழிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளோம்.

சில மணி துளிகள் பயன்படுத்தக் கூடிய வைபை நமக்கு பேராபத்தை விளைவிக்கும் என நம்மில் பலரும் அறியாத ஒன்றாக இருக்கிறது. இவ்வாறு இலவச வைபை ஆபத்துக்களை அறியாதோர், அவற்றை பயன்படுத்தும் போது அவசியம் கவனிக்க வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

ஒ.எஸ். அப்டேட்:

இலவச வைபை பயன்படுத்தும் போது உங்களது ஸ்மார்ட்போன் ஒ.எஸ். அப்டேட் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் அப்டேட் புதிய அம்சங்களை வழங்குவதோடு, ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பாகவும், மால்வேர் பாதிக்காதபடி இயங்குதளத்தை கடினமாக்குகிறது. இதனால் ஹேக்கர்கள் உங்களது தகவல்களை திருட முடியாது.

இதனால் உங்களது ஸ்மார்ட்போன் இயங்குதளத்தை எப்போதும் அப்டேட் செய்திருப்பது அவசியம் ஆகும்.

மொபைல் ஆண்டி-வைரஸ்:

பொது வைபை இணைப்புகளில் மாலவேர் தாக்குதல்களுக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். இதனால் ஸ்மார்ட்போனில் முறையான ஆண்டி-வைரஸ் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்வது அவசியம் ஆகும்.

இவ்வாறான மென்பொருள்கள் மால்வேர் தாக்குதல்களை எதிர்கொண்டு ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை பாதுகாக்கும்.

பொது வைபை வேகம் குறைந்தால்:

இலவச வைபை பயன்படுத்தும் போது இண்டர்நெட் வேகம் வழக்கத்தை விட மிக மோசமாக இருக்கும் பட்சத்தில் வைபை இணைப்பை உடனடியாக துண்டித்து விடுவது நல்லது.

இவ்வாறு இண்டர்நெட் வேகம் குறைவாக இருக்கும் போது வைபை ரவுட்டர் ஹேக் செய்யப்பட்டிருப்பதை உணர்த்தும். இதுதவிர உங்களது சாதனத்தில் இருந்து தகவல்கள் மற்றொரு சாதனத்திற்கு பரிமாற்றம் செய்யப்படும் போது இண்டர்நெட் வேகம் குறையும்.

ஆன்லைன் ஷாப்பிங், பேங்கிங்:

பொது இடங்களில் பயன்படுத்தும் போது ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் பேங்கிங் உள்ளிட்டவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. சில டூல்களை கொண்டு ஸ்கேமர்கள் உங்களது வேலையை சிரமப்படுத்தவோ அல்லது இடையூறு செய்ய முடியும்.

இதோடு உங்களது பாஸ்வேர்டுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் நிறுவனங்களுடன் மட்டும் ஷாப்பிங் செய்ய வேண்டும். முடிந்த வரை ஷாப்பிங் மற்றும் பேங்கிங் பணிகளை மேற்கொள்ள மொபைல் இண்டர்நெட் டேட்டா பயன்படுத்துவது நல்லது.

மொபைல் டேட்டாவில் ஷாப்பிங் மற்றும் பேங்கிங் வேலைகளை செய்வது உங்களது தகவல்களை பாதுகாப்பாக வைக்க உதவும்.