டிரோன் வாங்க போறீங்களா! அப்ப இந்த ஐந்தில் ஒன்றை தேர்ந்தெடுங்கள்

0
587

இன்றைய டெக்னாலஜி உலகில் ஆளில்லாத சிறிய வடிவ விமானம் என்று கூறப்படும் டிரோன்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக கேமிராவுடன் கூடிய டிரோன்கள் போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள் மற்றும் ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு இதன் பயன்பாடு அதிகம்

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் டிரோன்கள் எளிதில் கிடைக்கின்றது. இந்தியாவுக்கு டிரோன்கள் புதியது என்பதால் ஒருசில குறிப்பிட்ட வகை டிரோன்கள் மட்டுமே இ-காமர்ஸ் இணையதளங்களில் கிடைக்கும். இவற்றில் ஐந்து சிறந்த டிரோன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

சைமா X5SC (Syma X5SC)

எளிதில் மற்றும் வேகமாக பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த டிரோனில் உள்ள கேமிரா 360 டிகிரியில் சுழலும் தன்மை வாய்ந்தது. 3D எபெக்ட்டில் இயங்கும் இந்த டிரோன்களில் ஆறு வகை கண்ட்ரோல் சிஸ்டத்தை கொண்டுள்ளது. மேலும் 3D லாக் உள்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது

சைமா X5SW (Syma X5SW)

இந்த வகை டிரோன்கள் HD கேமிராவுடன் ஆறு வகை கண்ட்ரோல் சிஸ்டங்களை கொண்டுள்ளது. மேலும் 3D லாக், மற்றும் ஷெட்யூல் வசதி உள்ளது. வைபை மூலம் செயல்படும் இந்த டிரோன்களில் இருந்து தெளிவான புகைப்படம், வீடியோ ஆகியவற்றை பறக்கும்போதே அனுப்பிவிடும். மேலும் இது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்கள் மூலமும் இயங்கும் தன்மை உடையது

Kiditos விஷன் ட்ரோன்

இந்த வகை டிரோன் 360 டிகிரியில் பறப்பது மட்டுமின்றி பறக்கும்போது முன்பக்கம், பின்பக்கம், மேலே, கீழே என எளிதாக திசையை மாற்றும் அம்சங்கள் உள்ளது. 2.4GHz டிரான்ஸ்மீட்டர் உள்ள இந்த டிரோனில் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை நேரடியாக பெற்றுகொள்ள உதவும் இந்த டிரோன்கள் வைபையில் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது

Kiditos Syma X5Hw Wifi

மேல்பக்கம் இருந்து தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை படம்பிடிக்க இந்த டிரோனில் HD கேமிரா உள்ளது. 360 டிகிரியில் சுழலும் வகையில் உள்ள இந்த டிரோனின் கேமிரா மூலம் நேரடி ஒளிபரப்புக்கான வீடியோவை எடுக்கலாம். அதை உங்கள் போனிலும் தெரியும் வகையில் மாற்றலாம்

Syma X8W FPV Live Video

2MP வைபை HD கேமிராவை கொண்டுள்ள இந்த டிரோனில் 6 சிஸ்டம் கண்ட்ரோலை கொண்டுள்ளது. இந்த வகை டிரோன் வெளியில் மட்டுமின்றி கட்டிடத்தின் உள்ளேயும் செயல்படும் வகையில் உதவும். குறிப்பாக திருமணம் அல்லது விசேஷங்களுக்கு இதை பயன்படுத்தி மேல் கீழாக, இடது வலதாக, பக்கவாட்டில் என பல்வேறு கோணங்களில் படம்பிடிக்க போட்டோகிராபர்களுக்கு உதவுகிறது.