ஜிஎஸ்டி வரி : மொபைல் போன்களின் விலை உயருமா?

0
434

தற்போது நாடு முழுவதும் பேசப்படுவது ஜிஎஸ்டி வரி, அனைத்து தொழில் மற்றும் பொருட்கள் போன்றவைக்கு  குறிப்பிட்ட ஜிஎஸ்டி வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நன்மைகள் உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும், கடந்த சில நாட்களில், பல சில்லறை விற்பனையாளர்களும், மற்றும் தனியார் நிறுவனங்களும் குறைந்த விலையில் பல பொருட்களை விற்றது. திருத்தப்பட்ட வரி விகிதங்கள் பொறுத்தமட்டில் பல பொருட்களின் விலை ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தப்பட மாட்டாது என பல்வேறு மொபைல்போன் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

புதிய வரி: புதிய வரி முறையிலிருந்து வரும் வரிகளை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதால் சாம்சங், சியோமி,எக்ஸ்போ, ஜியோனி, இன்டெக்ஸ், லாவா போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன் விலைகள் அதிகரிக்காது என அந்நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

அர்விந்த் வோஹ்ரா : இப்போது அறிவித்துள்ள ஜிஎஸ்டி வரி எவ்வித தாக்கமும் ஏற்ப்படுத்தவில்லை மேலும் ஜியோனி ஸ்மார்ட்போன் சரியானவிலைக்கு விற்க்கப்படும் என ஜியோனியின் நிர்வாக இயக்குனர் அர்விந்த் வோஹ்ரா தெரிவித்தார்.

சில்லறை விற்பனையாளர்கள்: சில்லறை விற்பனையாளர்கள் பிராண்ட்களிலிருந்து பங்குகளை நிறுத்தி விட்டனர், சில விநியோகஸ்தர்கள் குறிப்பிட்ட விலைமதிப்பில் விற்பனை செய்ய தயார் நிலையில் உள்ளனர். இந்த ஜிஎஸ்டி வரி மூலம் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சில்லறை விற்பனையாளர்கள்.

லாவா: லாவா தயாரிப்புகளின் தலைவரான கௌரவ் நிகாம் தெரிவித்தது என்னவென்றால் ஜூலை 1ஆம் தேதிகொண்டுவரப்பட்ட இந்த ஜிஎஸ்டி வரி மூலம் ஸ்மார்ட்போன்களின் விலையில் எவ்வித மாற்றமும் வராது என உறுதியளித்தார்.