கேமரா டிடேக்டர் என்பது ஒரு கருவி. இது பெண்களுக்கு மிகவும் உபயோகம் உள்ளதாக இருக்கும். பல பொது ஹோட்டல் குளியல் அறையில், ஜவுளி கடையில் கேமரா வை யாருக்கும் தெரியாமல் ஒழித்து வைத்திருப்பார்கள். அவ்வாறு வைத்திருக்கும் காமெராவை கண்டறிய இந்த கேமரா டிடேக்டர் பயன்படுகிறது.

இது ஒரு சின்ன கருவி. எந்த இடத்திற்கும் சுலபமாக கொண்டு செல்லலாம். இதின் உள்ளே ஒரு லேசர் லென்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.அதை on செய்தால் லென்ஸ் ஒளி இயங்கும்.

உபயோகிக்கும் முறை:

  • அந்த டிடேக்டரில் ஒரு on பட்டன் உள்ளது. அதை அழுத்தி கொள்ளவும். பின் அந்த லென்ஸ் லிருந்து வெளிச்சம் வரும். நீங்கள் ஏதாவது பொது ஹோட்டல் அல்லது ஜவுளி கடையில் செல்கிறிர்கள் என்றால் இந்த டிடேக்டரை உங்களுடன் கொண்டு செல்லுங்கள். தனி அறையில் இருக்கும் போது இதை எடுத்து on செய்தால் அது கேமரா இருக்கும் இடத்தில் ஒரு புள்ளி(dot) அறிகுறியாக காட்டும். அதன் மூலம் கேமரா இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
  • இதற்கு இன்னொரு முறை உள்ளது. எந்த ஒரு பொது இடங்களிலும் தரவு இணைப்பு (data connection) இல்லாமல் இருக்காது. அனால் ரகசிய அறைகளில் எப்பொதுமே தரவு இணைப்பு இருக்காது. அவ்வாறு இருந்தால் அங்கு ஏதோ தவறு உள்ளதாக கருதலாம். அதை கண்டறிய அந்த கேமரா டிடேக்டர் யை உபயோகிக்கலாம். அந்த கருவியில் தரவு இணைப்பை அறிய  ஒரு  பட்டன் இணைக்க பட்டுள்ளது.  அதை அழுத்தினால் உங்களுடைய தனிப்பட்ட இடத்தில் தரவு இணைப்பு இருந்தால் அந்த கருவியில் ஒரு ஒலி எழும்பும். அதன் மூலம் நாம் தரவு இணைப்பு உள்ளதை அறியலாம்.